பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2021-07-16 16:38 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. 

நேற்று காலை கிணத்துக்கடவு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. மேலும் நேற்று கடுமையான பனி மூட்டம் நிலவியது.

 இதனால் கிணத்துக்கடவு நான்கு வழிச்சாலையில் வாகன ஓட்டுனர்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். 

ஆனாலும் எதிரில் வரும் வாகனங்கள் தெரிய வில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டுனர்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். 

கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் விவசாயம் சார்ந்தவை ஆகும். எனவே மழை காரணமாக வேளாண் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளனர்.

மேலும் செய்திகள்