போலீசாருடன் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வாக்குவாதம்

போலீசாருடன் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வாக்குவாதம்

Update: 2021-07-16 16:28 GMT
கோவை

கோவையில் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்திய தால் டவுன்ஹால் மற்றும் மாநகராட்சிக்கு செல்லும் சாலைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. 

இதேபோல் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதையும் அடைக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் காதர் தலைமையில்  கட்சியினர் திரண்டனர். 

 அவர்கள் போலீசாரிடம், சாலையில் தடுப்புகளை வைத்து அடைத் தால் எப்படி செல்ல முடியும் என்று கேட்டனர். பின்னர் அவர்கள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனால் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.  இதை அறிந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த மேலும் சிலர் அங்கு திரண்டனர்.

 அவர்களிடம், போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர். ஆனாலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்