கத்திமுனையில் முதியவரிடம் பணம் பறிப்பு

திண்டிவனத்தில் கத்திமுனையில் முதியவரிடம் பணம் பறிக்கப்பட்டது.

Update: 2021-07-16 16:24 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் வசந்தபுரத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 63). இவர் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள ஒரு கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர், ஜெயராமனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 ஆயிரத்து 500-ஐ பறித்துச்சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்