செம்மஞ்சேரியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

செம்மஞ்சேரியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது.

Update: 2021-07-16 16:07 GMT
சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து செம்மஞ்சேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜமேஷ் பாபு தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படையினர் புகார்கள் வந்த இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஜனா என்ற ஜனார்த்தனன் (வயது 19), அஜித் (24) சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்