நீதிமன்றத்தில் தீத்தடுப்பு ஒத்திகை
போடி நீதிமன்றத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.;
போடி:
போடி நீதிமன்ற வளாகத்தில் தீயணைப்புத்துறை சார்பில் நேற்று தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது. இதில் போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீப்பிடித்தால் அதில் இருந்து தப்பிப்பது, தீப்பிடிக்காமல் பாதுகாப்பது, தீயை அணைக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். இதில் நீதிபதிகள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.