இசேவை மையத்தில் குவிந்த பொதுமக்கள்

இசேவை மையத்தில் குவிந்த பொதுமக்கள்;

Update: 2021-07-16 12:05 GMT
திருப்பூர்
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆதார் கார்டில் பெயர் மாற்றம், செல்போன் எண் இணைப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக இசேவை மையத்திற்கு செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு தேவையான சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டு, வழங்கப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் பலரும் இசேவை மையங்களில் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக இசேவை மையங்கள் பல வாரங்களுக்கு பிறகு மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு சான்றிதழ்கள் பெற பலரும் இசேவை மையங்களுக்கு வருகிறார்கள். அதன்படி நேற்று திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள இசேவை மையத்தில் ஏராளமானவர்கள் குவிந்தனர். இதனால் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, தங்களது பணிகளை மேற்கொள்ள தாசில்தார் ஜெகநாதன் நடவடிக்கை எடுத்தார். அதன்படி பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்