கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா கடத்திய வாலிபர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான பாலகிருஷ்ணாபுரம் சந்திப்பில் சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் 2 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. போலீஸ் விசாரணையில், கஞ்சா கடத்தி வந்தவர் புதுகும்மிடிப்பூண்டி பாலீஸ்வரன்கண்டிகை பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளி போண்டா மணி (வயது 30) என்பது தெரியவந்தது. அவர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழைய குற்றவாளியான போண்டா மணியை கைது செய்தனர்.