பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் 10 ஆண்டுகளாக மின் இணைப்பு தராததால் பொதுமக்கள் மறியல்
பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் 10 ஆண்டுகளாக மின் இணைப்பு தராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துறையூர்,
பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் 10 ஆண்டுகளாக மின் இணைப்பு தராததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மின் இணைப்பு
துறையூர் அருகே சொரத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் எம்.ஜி.ஆர். நகர் அமைந்துள்ளது. இங்குள்ள 15 வீட்டிற்கு 10 ஆண்டுகளாக மின்இணைப்பு வழங்கப்பட வில்லை.
இதுசம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதிக்கு 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது.
சாலை மறியல்
இவற்றை கண்டித்து பெருமாள் மலை அடிவாரத்தில் பெரம்பலூர் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.