விருதுநகர்,
விருதுநகர் கிழக்கு போலீசார் அல்லம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் எண்ணைஆலைக்கு பின்புறம் காசு வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ. 11,050-ஐ பறிமுதல் செய்ததுடன் சூதாடிக்கொண்டிருந்த ரோசல் பட்டியை சேர்ந்த திராவிட மணி (வயது 56), என்.ஜி.ஓ. காலனி மாரியப்பன் (43), சூலக்கரைசுந்தரம் (54), அல்லம்பட்டி ரமேஷ் (47), சங்கர் ராஜ் (45), மாரிச்செல்வம் (41), கருப்பசாமி (48), வேல்ராஜ் (43), போலீஸ் பாலத்தை சேர்ந்த சையது (23) ஆகிய 9 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.