புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கொரோனா
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 684 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 47 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம், கொரோனாவால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 865 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 470 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 349 பேர் உயிரிழந்துள்ளனர்.