போட்டி போட்டு இயக்கப்பட்ட பஸ்களால் பரபரப்பு
போட்டி போட்டு இயக்கப்பட்ட பஸ்களால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருவரங்குளம்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கடைவீதியில் ஆலங்குடி, கறம்பக்குடியில் இருந்து இயக்கப்பட்ட 2 பஸ்கள் பயணிகளை ஏற்ற போட்டி போட்டன. பின்னர் அந்த 2 பஸ்களையும் திருவரங்குளம் கடைவீதியில் நடுரோட்டில் நிறுத்தி விட்டு அதன் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட ஊர் பிரமுகர்கள் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.