மணல் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் கைது

மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-15 19:24 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்நாதன் தலைமையிலான போலீசார் சுள்ளங்குடி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவர் அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முருகேசனின் மகன் பார்த்திபனை(வயது 28) கைது செய்து, அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்