பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கரூர்
கரூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் ராஜா தலைமை தாங்கினார். அப்பாஸ் மந்திரி, கிருஷ்ணமூர்த்தி, ராஜாராம், கார்த்திகேயன், பாலசுப்பிரமணியன், கணேஷ், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். பி.டி.எஸ்.களை மேம்படுத்துவதன் மூலம் உடனடியாக 4ஜி சேவையினை பி.எஸ்.என்.எல். நிறுவனம் ெதாடங்க வேண்டும். 5ஜி சேவைகளை ெதாடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 2021 ஜூன் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், இனிமேல் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி நாளன்று ஊதியம் வழங்க வேண்டும். இந்திய அரசாங்கம், நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளபடி பி.எஸ்.என்.எல்-ன் ஆப்டிக் பைபர் மற்றும் டவர்களை பணமாக்க முயற்சிக்க கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.