அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-15 18:32 GMT
திருவாரூர்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருவாரூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
காலிப்பணியிடங்கள்
அனைவருக்கும் இலவச  கொரோனா தடுப்பூசி வழங்கிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பிட வேண்டும். கொரோனா தொற்று நோயால் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.50 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். 
முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர், ஊதிய நிறுத்தம் உள்ளிட்ட பயன்களை உடனே வழங்க வேண்டும். 
ஆர்ப்பாட்டம்
தற்காலிக, ஒப்பந்த மற்றும் தினக்கூலி ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அரசு ஊழியர் சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். கூட்டுறவு ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். 
இதில் நிர்வாகிகள் தெட்சிணாமூர்த்தி, மகாலிங்கம், விஜயன், சிவகு மார் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.. முடிவில் மாவட்ட பொருளாளர் பிரகாஷ் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்