காரைக்குடி,
காரைக்குடி சிவில் சப்ளை தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் பள்ளத்தூர் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பள்ளத்தூர் புறநகர் பகுதியில் உள்ள ஒரு நவீன அரிசி ஆலையில் 23 மூடைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப் பட்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அரிசி மூடைகளை தமிழ்நாடு உணவுப் பொருள் பாதுகாப்பு கிடங்கில் ஒப்படைத்தனர்.பின்னர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து இருந்ததாக கனகவல்லி (வயது 58), பழனி (48) ஆகிய 2 பேர் மீது உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்துள்ளனர். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.