மலைப்பாதையில் மரம் முறிந்து விழுந்தது

பெரும்பாறை அருகே மலைப்பாதையில் மரம் முறிந்து விழுந்தது.

Update: 2021-07-15 17:31 GMT
கொடைக்கானல்: 

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, பட்டலங்காடு பிரிவு, கானல்காடு, தடியன்குடிசை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் சாரல் மழை பெய்தது. 

இந்த மழைக்கு பெரும்பாறை அருகே தாண்டிக்குடி-வத்தலக்குண்டு மலைப்பாதையில் பட்டலங்காட்டு பிரிவு என்னுமிடத்தில் மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. 

இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அந்த சாலையில் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

இதேபோல் மலைப்பாதையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்வயர்கள் அறுந்து மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் மலைக்கிராம மக்கள் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்