பொள்ளாச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2021-07-15 17:20 GMT
பொள்ளாச்சி

பி.எஸ்.என்.எல்.லில் உடனடியாக 4 ஜி சேவையை தொடங்கவும், 5 ஜி சேவைகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

ஜூன் மாத ஊதியத்தை வழங்கவும், இனிமேல் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி நாளன்று ஊதியம் வழங்க வேண்டும். 

பி.எஸ்.என்.எல். சேவையின் தரத்தை மேம்படுத்த வேகமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 இதற்கு மாவட்ட உதவி தலைவர் விஜேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் தங்கமணி முன்னிலை வகித்தார். 

கிளை செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் கொண்ட பாதாகைகளை கழுத்தில் அணிந்து கோஷம் எழுப்பினர். 

இதில் நிர்வாகிகள் சப்தகிரி, மனோகரன், சிவசாமி, பாலாஜி, மதுக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்