அரசு பள்ளி மாணவிகள் சாதனை
அனைவருக்கும் கல்வி திட்ட கட்டுரை போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
கூடலூர்
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இணையவழி மூலம் பல்வேறு தலைப்புகளில் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் வட்டார வள மைய அளவில் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பெரிய சூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் 3 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதில், கொரோனா காலத்து கதாநாயகர்கள் மருத்துவர்களே என்ற தலைப்பின் கீழ் 9-ம் வகுப்பு மாணவி மோனிசா எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசும், கொரோனா காலத்து கதாநாயகர்கள் துப்புரவு பணியாளர்களே என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய 10-ம் வகுப்பு மாணவிகள் திவ்யா 2-ம் பரிசையும், கோகிலவாணி 3-ம் பரிசையும் பெற்றனர்.
முதல் பரிசாக ரூ.7 ஆயிரம் மதிப்பிலான டேப், 2-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போனும், 3-ம் பரிசாக சயின்டிபிக் கால்குலேட்டர் ஆகியவை வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஓவேலி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகுமார், பெரிய சூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி (பொறுப்பு) தலைமை ஆசிரியர் நாகநாதன் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.