தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள்.

Update: 2021-07-15 17:14 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்று கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 691 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 83 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். மாவட்டத்தில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 2 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 646 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 229 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 580 ஆகும்

மேலும் செய்திகள்