அரக்கோணத்தில் நகராட்சியை கண்டித்து உணவு உண்ணும் நூதன போராட்டம்
நகராட்சியை கண்டித்து உணவு உண்ணும் நூதன போராட்டம்
அரக்கோணம்
அரக்கோணம் நகராட்சியில் கடந்த பல நாட்களாக கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததாலும், குப்பைகள் அகற்றப்படாததாலும் சுகாதார சீர் கேடு ஏற்படுவதாக கூறி, நடவடிக்கை எடுக்காத அரக்கோணம் நகராட்சியை கண்டித்து அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து உணவு உண்ணும் நூதன போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டனர்.
இதே நிலை நீடித்தால் நகராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்களுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர். இந்த நூதன போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.