புகையிலை பொருட்களுடன் 2 பேர் பிடிபட்டனர்

புகையிலை பொருட்களுடன் 2 பேர் பிடிபட்டனர்

Update: 2021-07-15 17:05 GMT
பரமக்குடி, 
பரமக்குடி சவுகத் அலி தெருவைச் சேர்ந்தவர் ராமஜெயம் (வயது59). இவரும் இவரது மகன் ராஜேஷ் (30) ஆகிய 2 பேரும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா, பாக்குகள் ஆகியவற்றை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து 32 கிலோ எடை உள்ள புகையிலை, பான் மசாலா, பாக்கு பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும் ராமஜெயம், ராஜேஷ் 2 பேர் மீதும் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பின்பு விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்