மரக்காணத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2021-07-15 16:40 GMT
விழுப்புரம், 
சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை காஞ்சீபுரம் மாவட்டம் தின்பசமுத்திரத்தை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 33) என்பவர் ஓட்டிச்சென்றார். கண்டக்டராக சென்னை கிண்டியை சேர்ந்த விண்பால் (43) என்பவர் இருந்தார்.
இந்த பஸ்சில் அரசு நெறிமுறைகளின்படி 50 சதவீத பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ், கிழக்கு கடற்கரை சாலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சம்புவெளி தெரு அருகே நேற்று அதிகாலை 2 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது அடையாளம் தெரியாத 5 நபர்கள், திடீரென பஸ்சை வழிமறித்ததோடு கண் இமைக்கும் நேரத்திற்குள் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கி விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கி சேதமடைந்தது. இதன் சேத மதிப்பு ரூ.10 ஆயிரமாகும். இதுகுறித்து பஸ் டிரைவர் விஸ்வநாதன், மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்