காயங்களுடன் பிணமாக கிடந்த தொழிலாளி

பொங்கலூரை அடுத்து பிஏபி வாய்க்கால் அருகே தலையில் காயங்களுடன் வடமாநில தொழிலாளி ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-07-15 16:13 GMT
பொங்கலூர்
பொங்கலூரை அடுத்து பிஏபி வாய்க்கால் அருகே தலையில் காயங்களுடன் வடமாநில தொழிலாளி ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழிலாளி
பொங்கலூர் அருகே உள்ள கொடுவாயிலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் பி.ஏ.பி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் அருகில் நேற்று 40 வயது மதிக்க ஒருவர் இறந்து கிடப்பதாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். பின்னர் அங்கு பிணமாக கிடந்தவரின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவருடைய தலையில் காயம் இருந்தது. இதையடுத்து அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனு்பி வைக்கப்பட்டது. மேலும் இறந்து கடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவரர் ஒடிசாவை சேர்ந்த சஞ்சய் குமார் தாஸ் வயது 40 என்பது, பொங்கலூர் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தததும் தெரியவந்தது. 
கொலையா
இவரது தலையில் காயம் இருந்ததால் அவர் எப்படி இறந்தார், கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

----
Reporter : V.P. Jeganathan  Location : Tirupur - Pongaloor

மேலும் செய்திகள்