கோவை டாக்டரிடம் ரூ.2 கோடியே 85 லட்சம் மோசடி
கோவை டாக்டரிடம் ரூ.2 கோடியே 85 லட்சம் மோசடி;
கோவை
கடன் வாங்கி தருவதாக கூறி கோவை டாக்டரிடம் ரூ.2 கோடியே 85 லட்சம் மோசடி செய்த ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மோசடி குறித்து கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது
மருத்துவமனை சேர்மன்
கோவை நீலாம்பூர் பகுதியில் ராயல் கேர் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் மாதேஸ்வரன்.
இவர், சுமார் ரூ.50 கோடி செலவில் மருத்துவமனையை விரிவாக்கம் செய்து புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்தார்.
இந்த நிலையில், டாக்டர் மாதேஸ்வரனின் நண்பர் ஒருவர் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட் டை ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம் (வயது55) உள்பட 4 பேர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.
கடன் வாங்கி தர வில்லை
அப்போது அவர்கள் மருத்துவமனை விரிவாக்க பணிக்காக வங்கிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடன் வாங்கி தருகிறோம். அதற்கு தங்களுக்கு ரூ.2 கோடியே 85 லட்சம் கமிஷன் தரவேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அதை நம்பிய டாக்டர் மாதேஸ்வரன், அவர்களிடம் ரூ.2 கோடியே 85 லட்சம் கொடுத்தார். ஆனால் அதன்பிறகு பன்னீர்செல்வம் மற்றும் அவரை சார்ந்தவர்கள் கடன் வாங்கி தரவில்லை.
வீடு, அலுவலகத்தில் சோதனை
இது தொடர்பாக டாக்டர் மாதேஸ்வரன் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் உமா மேற்பார்வையில் உதவி கமிஷனர் பார்த்திபன், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அலுவலகங்கள் சென்னை அடை யாறு, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் இருக்கிறது. எனவே கோர்ட்டு உத்தரவு பெறப்பட்டு அங்கு சோதனை நடத்தப்பட் டது.
ஊராட்சி தலைவர் உள்பட 2 பேர் கைது
இதில் கையெழுத்து போட்ட ஏராளமான முத்திரை தாள்கள், புரோ நோட்டுக்கள், காசோலைகள், பல்வேறு தரப்பினருடன் போட்ட ஒப்பந்தங்கள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் சிக்கியது.
இதைத்தொடர்ந்து சென்னையில் பதுங்கியிருந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரது கூட்டாளியான செல்வகுமார் (47) ஆகிய 2 பேரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்த 2 சொகுசு கார்கள், ராஜஸ்தான் மாநிலம் சைலேஷ் பிரபாகர் சிங்கர் என்பவர் பெயரில் ஆக்சிஸ் வங்கியில் பெறப்பட்டதாக ரூ.49.85 கோடி மற்றும் ரூ.49.95 கோடிக்கான 2 போலி வரைவோலைகளும் கைப்பற்றப்பட்டது.
சிறையில் அடைப்பு
பன்னீர் செல்வம் கடந்த 2010-ம்ஆண்டு கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணிக்கம் என்பவரிடம் 2 கிலோ தங்கம் தருவதாக கூறி ரூ.10 லட்சம் வாங்கியுள்ளார். பின்னர் அவர் 5 லட்ச ரூபாய் கொடுத்தார். அது கள்ள ரூபாய் நோட்டு என தெரியவந்தது.
இந்த மோசடி தொடர்பாக பன்னீர் செல்வம் மீது வழக்கு பதிவு செய் யப்பட்டது. இவர் மீது தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம், செல்வகுமார் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.