ஆத்தூரில் 2 பேருக்கு மது பாட்டில் குத்து

ஆத்தூரில் 2 பேர் மது பாட்டிலால் குத்தப்பட்டனர்.

Update: 2021-07-15 15:22 GMT
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகேயுள்ள குமாரபன்னையூரை சேர்ந்த சுப்பையா மகன் மாரி சிவா(வயது 31). இவர் ஆத்தூர் பஜாரில் அரிசி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் அவர் கடையில் அரிசி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அந்த கடைக்கு செல்வன்புதியனுரை சேர்ந்த சுகுமார் மகன் சுரேஷ் (35) என்பவர் அரிசி வாங்க வந்துள்ளார். அப்போது அங்கு வந்த குமாரபன்னையூரை சேர்ந்த மாரியப்பன் மகன் மூர்த்தி என்ற ராமச்சந்திர மூர்த்தி(28), அரிசி கடை முன்பு நின்று கொண்டு மாரிசிவாவை அவதூறாக பேசியுள்ளார். இதை தட்டிக்கேட்ட சுரேஷை அருகில் கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து மூர்த்தி குத்தியுள்ளார். இதை தடுக்க சென்ற மாரிசிவாவையும் அவர் பாட்டிலால் குத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டார். இதில் காயமடைந்த மாரி சிவா காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியிலும், சுரேஷ் ஆத்தூர் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்