ஆட்டோவில் வந்து ஆடுகள் திருட முயன்றவர் கைது

ஆட்டோவில் வந்து ஆடுகள் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-15 14:52 GMT

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 35). இவர் நேற்று முன்தினம் கரிசல்பட்டி அருகே உள்ள காட்டில் ஆடுகள் மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மர்ம நபர் ஒருவர் ஆட்டோவில் வந்து ஆடுகளை திருட முயன்றார். இந்த சத்தம் கேட்டு ஜெயராமன் கூச்சல் போட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து அந்த நபரை மடக்கி பிடித்து ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் போடி அருகே உள்ள அணைக்கரைபட்டி கிராமத்தை சேர்ந்த கோபி (23) என்பதும், ஆட்டோவில் வந்து ஆடுகளை திருட முயன்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர்.


மேலும் செய்திகள்