தோட்டத்தில் புல் அறுத்தபோது மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு 2 பேர் கைது

தோட்டத்தில் புல் அறுத்தபோது மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-15 14:49 GMT

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகைபுதூர் கிராமத்தை சேர்ந்த மாயன் மனைவி பசுபதி (வயது 55). இவர் நேற்றுமுன்தினம் மேல்மங்கலம் சாலையில் உள்ள அவரது தோட்டத்தில் மாட்டுக்கு புல் அறுத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென பசுபதி மீது மிளகாய் பொடி தூவி அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர். இதையடுத்து பசுபதி கூச்சல் போட்டார். இந்த சத்தம் கேட்டு மாயன் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நகை பறித்தவர்களை மடக்கிப்பிடித்து வைகை அணை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
போலீசார் விசாரணையில் அவர்கள் வடுகப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (25), சருத்துப்பட்டியை சேர்ந்த செல்வம் (38) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் நகை மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்