வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய 76 வீடுகள் இடித்து அகற்றம்
வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய 76 வீடுகள் இடித்து அகற்றம்
கோவை
கிருஷ்ணாம்பதி குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டிய 76 வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர்.
ஆக்கிரமிப்பு வீடுகள்
கோவை மாநகராட்சி பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப் பட்டு உள்ள கட்டிடங்களை இடித்து அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குளங்களை சுற்றி ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை பி.என்.புதூரில் கிருஷ்ணாம்பதி குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட் டப்பட்டு இருந்தன.
அந்த வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோவைப்புதூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.
இடித்து அகற்றும் பணி
அவர்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிபெயர்ந்தனர். இதைத்தொடர்ந்து, ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்றும் பணியில் மாநகராட்சி நகரமைப்பு திட்ட அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.
முதலில் வீடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த மின் இணைப்புகள் துண்டிக் கப்பட்டன. பின்னர் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொது மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
தண்ணீர் பாதை சீரமைப்பு
இது குறித்து மாநகராட்சி நகர திட்டமைப்பு அதிகாரிகள் கூறியதாவது
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கிருஷ்ணாம்பதி குளக்கரை மேம்படுத் தப்பட்டு வருகிறது. இந்த குளத்திற்கு கோவில்மேடு பள்ளத்தில் இருந்து தண்ணீர் வருவதற்காக வாய்க்கால் உள்ளது.
அந்த வாய்க்காலில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமித்து 76 வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. இந்த வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் மாற்றுஇடம் வழங்கப்பட்டு விட்டது.
இதைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. வாய்க்காலில் உள்ள புதர்கள் அகற்றப்பட்டு தண்ணீர் செல்லும் பாதை சீரமைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.