கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆணையாளர் ஆய்வு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆணையாளர் ஆய்வு
கோவை
கோவை ஒண்டிப்புதூரில் 60 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர், அங்குள்ள தெருநாய் கருத்தடை மையத்தை பார்வையிட்டு, அங்கிருந்த ஊழியர்களிடம் நாய்களுக்கு செய்யப்படும் கருத்தடை சிகிச்சை, பராமரிப்பு முறை குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து 33 மற்றும் 34 -வது வார்டுகளில் ஆய்வு செய்த அவர், முன்கள பணியாளர்களிடம் பேசியதாவது
கொசுவால் ஏற்படும் நோய்களை தடுக்க வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துகொள்ளுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்த வேண்டும். டயர், தேங்காய் சிரட்டை, உடைந்த குடம், உபயோகமற்ற பொருட்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகளை அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும்.
தண்ணீரில் கொசுப்புழுக்களை அழிக்கும் மருந்துகளை ஊற்ற வேண்டும் என்றார். பின்னர் அவர், கருவலூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.