தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2பேர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-07-15 14:04 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்ததாக தூத்துக்குடி மேலசண்முகபுரத்தை சேர்ந்த அந்தோணி மகன் மாரியப்பன் (வயது 25), சங்கர் மகன் செல்வக்குமார் (23) ஆகிய 2 பேரையும் தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்