தூத்துக்குடியில் ரெயிலில் அடிபட்டு கட்டிட தொழிலாளி பலி
தூத்துக்குடியில் ரெயிலில் அடிபட்டு கட்டிட தொழிலாளி பலியானார்
தூத்துக்குடி:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள நயினார்புரத்தை சேர்ந்தவர் பொன்முத்தையா. இவருடைய மகன் பாலமுருகன் (வயது 42). கட்டிட தொழிலாளி. வாய் பேசமுடியாதவர். இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்து உள்ளார். மாலையில் கே.வி.கே.நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக 4-ம் கேட் அருகே தண்டவாளத்தை கடந்து சென்றாராம். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தண்டவாளத்தில் படுத்துவிட்டாராம். இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி பாலமுருகன் பரிதபமாக இறந்து உள்ளார்.
இது குறித்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.