தமிழகத்தில் 2,458 பேருக்கு கொரோனா: 11 மாவட்டங்களில் பாதிப்பு சற்று உயர்ந்தது
தமிழகத்தில் நேற்று 2,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 மாவட்டங்களில் பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 45 ஆயிரத்து 387 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,428 ஆண்கள், 1,030 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 458 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 270 பேரும், ஈரோட்டில் 175 பேரும், சேலத்தில் 164 பேரும், சென்னையில் 530 பேரும், திருப்பூரில் 146 பேரும், தஞ்சாவூரில் 171 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 12 வயதுக்குட்பட்ட 116 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 323 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர், கடலூர் உள்பட 11 மாவட்டங்களில் முந்தைய நாளைவிட நேற்று பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.
55 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 197 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 14 லட்சத்து 76 ஆயிரத்து 288 ஆண்களும், 10 லட்சத்து 50 ஆயிரத்து 75 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 25 லட்சத்து 26 ஆயிரத்து 401 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 91 ஆயிரத்து 914 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 64 ஆயிரத்து 125 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 39 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 16 பேரும் என 55 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக கோவையில் 8 பேரும், சென்னை, தஞ்சாவூரில் தலா 5 பேரும், திருச்சி, நெல்லையில் தலா 3 பேரும் உள்பட நேற்று மட்டும் 27 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 33 ஆயிரத்து 557 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
73,880 படுக்கைகள் காலி
தமிழகத்தில் ஆஸ்பத்திரிகளில் நேற்று 40 ஆயிரத்து 26 ஆக்சிஜன் படுக்கைகள், 26 ஆயிரத்து 569 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 285 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 73 ஆயிரத்து 880 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளது.
3,021 பேர் ‘டிஸ்சார்ஜ்’
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3,021 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 24 லட்சத்து 62 ஆயிரத்து 244 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 30 ஆயிரத்து 600 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.