பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
5 ஜி சேவையை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜூன் மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். 3-வது ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் மற்றும் நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீதம் ஓய்வுகால பலன்கள் ஆகியவற்றை தீர்வு காண வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல். அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் சார்பில் நேற்று ரெயில் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கிளைத்தலைவர் ராஜராஜன் மற்றும் தேசிய தொலைதொடர்பு சம்மேளன மாவட்ட தலைவர் அந்தோணி மரிய பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.