புனேவில் இருந்து 4¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

புனேவில் இருந்து 4¾ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன.

Update: 2021-07-15 09:39 GMT
ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 71 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன. தமிழகத்தில் இதுவரை சுமார் 1 கோடியே 67 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் புனேவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் 40 பெட்டிகளில் 4 லட்சத்து 78 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் வந்தன. இவை பெரியமேட்டில் உள்ள மத்திய சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

மத்திய தொகுப்பிற்கு வந்த தடுப்பூசிகள் அனைத்தும், தேவைப்படும் தென் மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்