கடன் தொல்லையால் கழிவுநீர் அகற்றும் நிலையத்தில் தொழிலாளி தற்கொலை

திருவொற்றியூர், கடன் தொல்லையால் கழிவுநீர் அகற்றும் நிலையத்தில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-07-15 05:25 GMT
திருவொற்றியூர், 

திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நாயுடு காலனி பகுதியை சேர்ந்தவர் ஜிலானி (வயது 51). இவர், திருவொற்றியூர் மண்டல குடிநீர் வழங்கல் வாரியத்துக்கு சொந்தமான பேசின் சாலையில் உள்ள கழிவுநீர் அகற்றும் நிலையத்தில் மோட்டார் ஆபரேட்டராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு அதிகமான கடன் இருந்ததாக கூறப்படுகிறது. கடனை கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடு்த்ததாக தெரிகிறது. இதனால் கடந்த சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பேசின் சாலையில் உள்ள கழிவுநீர் அகற்றும் நிலையத்தில் ஜிலானி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்