சிங்கப்பெருமாள் கோவில் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு 3 பேர் மீது வழக்கு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள திருக்கச்சூர் பெரியார் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (வயது 24), இவர் மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் முன்பு 3 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.
இது குறித்து ஞானபிரகாஷ் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர் இது குறித்து மறைமலைநகர் போலீசார் தியாகராஜன், பிரவீன், ராஜ்குமார் என 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.