வண்டலூர் பூங்கா எதிரே லாரிகள் மோதல்; பாட்டில்கள் உடைந்து சிதறியதால் போக்குவரத்து பாதிப்பு

கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை நோக்கி நேற்று காலி பாட்டில்களை மூட்டைகளில் ஏற்றி கொண்டு ஒரு மினி லாரி சென்று கொண்டிருந்தது.

Update: 2021-07-15 04:40 GMT
வண்டலூர், 

வண்டலூர் பூங்கா அருகே செல்லும்போது சென்னை நோக்கி வந்த கன்டெய்னர் லாரி, கண்ணாடி பாட்டில்கள் ஏற்றி வந்த மினி லாரியின் பின்பக்கத்தில் மோதியது. இதில் மினி லாரியில் இருந்த கண்ணாடி பாட்டில்கள் உடைந்து சாலையின் நடுவே நாலாபுறமும் சிதறியது.

போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக சாலையில் சிதறி கிடந்த பாட்டில்களை அகற்றிவிட்டு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக 20 நிமிடம் வண்டலூர் பூங்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்