கொல்லிமலையில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த தந்தை, மகன் கைது
கொல்லிமலையில் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.;
சேந்தமங்கலம்,
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் திருப்புலி நாடு ஊராட்சியில் உள்ள படசோலை கிராமத்தில் அனுமதியின்றி சிலர் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையிலான போலீசார் படசோலை கிராமத்தில் ரோந்து சுற்றி வந்தனர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த கோபால் (வயது 46), அவரது மகன் ரகுபிரியன் (23) ஆகியோர் 2 நாட்டுத்துப்பாக்கிகளை கையில் வைத்து கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். அப்போது போலீசார் விரட்டி சென்று அவர்களை பிடித்து அவர்களிடம் இருந்த 2 நாட்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்ததுடன் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.