சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைக்காரர்களுக்கு அபராதம்
நெல்லையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்பேரில், மேலப்பாளையம் மண்டல சுகாதார ஆய்வாளர்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள், மேலப்பாளையம் பகுதியில் உள்ள பேக்கரி, ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்த 8 கடைக்காரர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
இதேபோன்று பாளையங்கோட்டை சுகாதார ஆய்வாளர் முருகன் மற்றும் அதிகாரிகள் பாளையங்கோட்டை மார்க்கெட், திருவனந்தபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்த கடைக்காரர்களுக்கு மொத்தம் ரூ.3 ஆயிரத்து 600 அபராதம் விதித்தனர்.