நெல்லை அருகே 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை அருகே 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2021-07-14 22:08 GMT
நெல்லை:
நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த சேதுராயன்புதூர் வடக்கு தெருவை சேர்ந்த பரமசிவன் மகன் சுந்தர்ராஜ் (வயது 28). இவரை கஞ்சா விற்ற வழக்கில் மானூர் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்று அவர், சுந்தர்ராஜை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார்.

சீதபற்பநல்லூர் அருகே உள்ள சிறுக்கன்குறிச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முண்டன் என்ற சுடலைமுத்து (31). அடிதடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ள இவரை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சீதபற்பநல்லூர் போலீசார் சிறையில் சமர்ப்பித்தனர்.

மேலும் செய்திகள்