கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி போராட்டம்
ஜலகண்டாபுரத்தில் விலை உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம் நடத்தினர்
மேச்சேரி
சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஜலகண்டாபுரத்தில் நேற்று நூதன போராட்டம் நடந்தது. இதையொட்டி பேரூராட்சி வீதிகளில் விறகையும், மண் அடுப்பையும் தலையில் சுமந்தபடி பெண்கள் வந்தனர். பின்னர் பஸ் நிலையத்துக்கு வந்து சேர்ந்த மாதர் சங்கத்தினர் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்து அழுதும் மத்திய அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு நங்கவள்ளி ஒன்றிய மாதர் சங்க செயலாளர் கவிதா தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் ஞான சவுந்தரி, பரமேஸ்வரி, ராஜாத்தி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் ஒன்றிய பொருளாளர் கார்த்திகா நன்றி கூறினார். இதில் மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.