பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த மாத இறுதியிலும், இந்த மாத தொடக்கத்திலும் பலத்த மழை பெய்தது. அதன்பிறகு அவ்வவ்போது லேசான தூறல் மழை மட்டும் பெய்து நிலையில் பெரம்பலூரில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் இருந்தது. ஆனால் மாலையில் பெரம்பலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென்று பெய்ய தொடங்கிய மழை, சிறிது நேரம் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. பெரம்பலூரில் மழை நின்றவுடன் நகராட்சி சார்பில் ஆங்காங்கே கொசு மருந்து அடிக்கப்பட்டது. நேற்று பெய்த மழையினால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.