சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும், 17 வயதுடைய சிறுமிக்கும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த சிறுமியுடன் அந்த வாலிபருக்கு பழக்கம் இருந்ததால் அச்சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக லாடபுரம் கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜா பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிறுமியை திருமணம் செய்ததாகவும், போக்சோ சட்டத்தின் கீழும் அந்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இரு வீட்டாரை சேர்ந்த சிலர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.