கும்பகோணத்தில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,279-க்கு ஏலம்
கும்பகோணத்தில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,279-க்கு ஏலம் போனது.
கும்பகோணம்:-
கும்பகோணத்தில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,279-க்கு ஏலம் போனது.
பருத்தி ஏலம்
கும்பகோணம் கொட்டையூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்துக்கு தஞ்சை விற்பனை குழு செயலாளர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் தாட்சாயிணி முன்னிலை வகித்தார். இதில் கும்பகோணம் மற்றும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த விவசாயிகளின் கொண்டுவந்த பருத்தி ஏலம் விடப்பட்டது. 12 வியாபாரிகள் ரூ.2 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள பருத்திக்கு விலை மதிப்பீடு செய்து கொள்முதல் செய்தனர்.
ஒரு குவிண்டால் விலை
இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7 ஆயிரத்து 279-க்கு ஏலம் போனது. குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 909-க்கும், சராசரியாக ரூ.6 ஆயிரத்து 859-க்கும் ஏலம் போனது. வருகிற 21-ந் தேதி (புதன்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இருந்தபோதும் அன்றைய தினம் பருத்தி ஏலம் நடைபெறும் என ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.