அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் நூதன போராட்டம்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்
கரூர்
கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு நேற்று கரூர் மாவட்டக்குழு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பிரதமர் மோடிக்கு வடை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் லட்சுமி காந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பு மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். மருந்து தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க வேண்டும். கொரோனா மருந்து வழங்குவதில் பாரபட்சம் காட்டும் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது. பின்னர் பிரதமர் தலைமை செயலகம், டெல்லி என்ற முகவரிக்கு வடைகளை தபால் கவரில் வைத்து அனுப்பி வைத்தனர்.