உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா
தென்கரை உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா
சோழவந்தான்
சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்திலுள்ள உச்சி மாகாளியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் இல்லாமல் ஆகம விதிப்படி திருவிழா நடந்து வருகிறது. விழாவில் 7-ம் நாளில் பெண்கள் பூத்தட்டு எடுத்து வரும் விழா கார்த்திக் ரசிகர் மன்றத்தின் சார்பில் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு அம்மனுக்கு 21 வகையான அபிஷேகம் நடைபெற்று அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 8-ம் நாள் திருவிழாவை கையாற்றில் சக்திகரகம் எடுத்து வந்தனர். 9-ம் திருவிழாவில் காலையில் பால்குடம், மாலை அக்னிச்சட்டி சக்தி பூசாரி ஒருவர் மட்டும் பக்தர்கள் இல்லாமல் எடுத்து வந்தார். இரவு பூப்பல்லாக்கு நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். தென்கரை கிராமத்தார்கள் திருவிழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தென்கரை ஊராட்சி சார்பாக சுகாதாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.