மதுரை
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன்(வயது 24). என்ஜினீயர். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பிளஸ்-2 படித்த 17 வயது சிறுமியிடம் அடிக்கடி பேசி வந்தார். ஒரு கட்டத்தில் அந்த சிறுமியை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறினார். மேலும் அவரை வெளியூருக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மாயகிருஷ்ணனை கைது செய்தனர்.