கொரோனாவால் 31 பேர் பாதிப்பு

கொரோனாவால் 31 பேர் பாதிப்பு

Update: 2021-07-14 19:01 GMT
மதுரை
மதுரையில் மாவட்டத்தில் நேற்று 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 21 பேர் நகர் பகுதியையும் மற்றவர்கள் புறநகர் பகுதியையும் சேர்ந்தவர்கள். அதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73, 088 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று ஒரே நாளில் 47 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீட்டிற்கு திரும்பினர். இதில் 30 பேர் நகர் பகுதியையும் மற்றவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களை சேர்த்து மதுரை மாவட்டத்தில் நோய் தொற்றிலிருந்து குணமாகி சென்றவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 404 ஆக உயர்ந்துள்ளது. மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதாலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
அதன்படி நேற்று மதுரையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 544 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்தநிலையில் மதுரையில் நேற்றும் கொரோனாவிற்கு யாரும் உயிரிழக்கவில்லை

மேலும் செய்திகள்