மணல் திருடிய வாலிபர் கைது

திருப்பத்தூரில் மணல் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-14 17:36 GMT
திருப்பத்தூர்,ஜூலை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் காளியம்மன் கோவில் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அதிகாலையில் சிங்கம்புணரி ரோட்டில் இருந்து இணைப்பு ரோட்டில் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த லாரியில் 2 யூனிட் மணல் திருடி வந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து மணலையும், லாரியையும் பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் மாதவன் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 36) என்பவரை கைது செய்தனர். 
மேலும் லாரி உரிமையாளர் பஷீர் முகமது மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்