புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 பேர் மீது குண்டர் சட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
புதுக்கோட்டை, ஜூலை.15-
புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை வழக்கு
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் அருகே ஆலங்குடியில் வினோத்குமார் என்பவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விராலிமலை நீர்பழனியை சேர்ந்த சிலம்பரசன் (வயது33), கருப்பையா (25), மருதமுத்து (29) ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.
கொலை முயற்சி வழக்கு
இதேபோல் அறந்தாங்கி கோபாலசமுத்திரத்தை சேர்ந்த ஆல்வின் என்பவரை கொலை செய்ய முயற்சித்த அறந்தாங்கியை சேர்ந்த பைசல் (27), அன்வர் (21) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அறந்தாங்கி கிளை சிறையில் அடைத்தனர்.
இந்த 2 சம்பவங்களிலும் கைதான 5 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதா ராமுக்கு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்தார்.
திருச்சி சிறையில் அடைப்பு
அதன்படி 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து அதற்கான நகலில் கையெழுத்து பெற்றனர். அறந்தாங்கி கிளைசிறையில் உள்ள பைசல், அன்வர் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். மேலும் சிலம்பரசன், கருப்பையா, மருதமுத்து ஆகிய 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.